ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் பலர் வந்து அம்மனை தரிசனம் செய்துவருகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா நடைபெறும். அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் தீமிதி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இத்தகைய சிறப்புவாய்ந்த குண்டம் திருவிழா மார்ச் 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்வும், ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: தீட்டை காரணம் காட்டி வீட்டிலிருந்து தனி அறைக்கு ஒதுக்கப்படும் பெண்கள்