ETV Bharat / state

மளிகைக்கடைக்காரரிடம் துப்பாக்கி காட்டி பணம் கேட்டு மிரட்டல்! - துப்பாக்கி காட்டி பணம் கேட்டு மிரட்டல்

ஈரோடு: பணத்திற்காக துப்பாக்கியை காட்டி மளிகைக்கடைக்காரரிடம் மிரட்டல் விடுத்த நபரை காவல் துறை தேடிவருகிறது.

துப்பாக்கி காட்டி பணம் கேட்டு மிரட்டல்
துப்பாக்கி காட்டி பணம் கேட்டு மிரட்டல்
author img

By

Published : Apr 29, 2021, 8:06 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் சந்தோஷ் என்பவர் மளிகைக்கடை நடத்திவருகிறார்.

இவர் மினி சரக்கு வாகனம் வாங்க ஆசைப்பட்டு, துறையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மினி சரக்கு வாகன ஓட்டுநர் பிரபு என்பவரிடம் கடந்த வாரம் ரூ. 2.50 லட்சம் கொடுத்துள்ளார்.

ஒரு வார காலமாக வாகனம் வாங்கிக்கொடுக்காமல் இழுத்தடித்த பிரபு, மேலும் ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சந்தோஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சந்தோஷ், தன்னிடம் தற்போது இவ்வளவு தொகை இல்லை எனவும், ச.கணபதிபாளையத்தில் உள்ள தனது நண்பர் ராஜகுருவிடம் கடன் வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஏப். 28) பிரபு, சந்தோஷை சந்தித்து தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு சந்தோஷ் ச.கணபதிபாளையம் சென்று பணம் வாங்கி வருகிறேன் என தெரிவித்ததால், பிரபு தானும் வருவதாக கூறி சந்தோஷ்சை தனது இருசக்கர வாகனத்தில் ச.கணபதிபாளைத்திற்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள் அரவமற்ற இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பிரபு, தனது வாகனத்தின் இருக்கையின் அடியில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து, பணம் தரவில்லையெனில் சுட்டுக்கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில் பயந்து போன சந்தோஷ், பிரபுவை அழைத்துக்கொண்டு ச.கணபதிபாளையம் வந்துள்ளார்.

பின் இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்குவந்து, துப்பாகியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று கூடவே துப்பாகியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு, பிரபு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.