ETV Bharat / state

பெருந்துறை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - பலருக்கு படுகாயம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

govt bus accident in erode perundurai
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 35 பேர் படுகாயம்
author img

By

Published : Nov 24, 2020, 9:35 PM IST

ஈரோடு: பெருந்துறை அருகே திருவாச்சி கூரபாளையம் பிரிவு பகுதியில் கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

சேலம் நோக்கிச் சென்ற லாரி பேருந்தை முந்தி சென்றதோடு, திடீரென இடதுபுறம் திரும்பியதால் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏழு ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.

govt bus accident in erode perundurai
காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர்

இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாவிட்டவில்லை. தற்போது, 22ஆண்கள், 13பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலும், படுகாயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இதையும் படிங்க: வண்டி சக்கரத்தில் மயங்கி விழுந்த முதியவர்: சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.