ETV Bharat / state

"பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தால் அனைத்திலும் சுதந்திரம் கிடைக்கும்" - தமிழிசை..!

Tamilisai Soundararajan: பெண்களுக்குப் பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்து விட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Telangana Governor Tamilisai Soundararajan
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 10:30 PM IST

"பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தால் அனைத்திலும் சுதந்திரம் கிடைக்கும்" - ஆளுநர் தமிழிசை பேச்சு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்குப் பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்து விட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

பெண்கள் தனக்காகக் கவலைப்படுவதில்லை தங்கள் குடும்பத்திற்காகத் தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றான். ஆனால் பெண்கள் வயதானவர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். பெண்களின் வெளித் தோற்றத்தை வைத்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. பெண்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒருவரை நிராகரிப்பதற்குக் கூட சுதந்திரம் இல்லை, அந்த சுதந்திரம் வீட்டிலிருந்தாலும் வெளியில் இல்லை. பத்து நபர்களுக்குக் கடனுதவி வழங்கினால் அதில் மூன்று பேர் பெண்களாக இருக்க வேண்டும்.

வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்து வழங்கும் திட்டங்களை இறுகப்பற்றி வாழ்வில் பெண்கள் முன்னேற வேண்டும்.

இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தைக் காத்தார்களோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களைக் காப்பாற்றினர்.

பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும் சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவராக மற வேண்டும் பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: “நான் கோட்-சூட்டில் வந்தது எதற்காக தெரியுமா?” - முதலமைச்சர் சுவாரஸ்ய பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.