ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை வழங்குதல், கரோனா தடுப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருவாய் துறை, நகராட்சி ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று (செப்.12) நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு, அரசு ஊழியர்களுக்கு நற்ச்சான்றிதழ்களையும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வமாக உள்ளனர். 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் இது வரை புதிதாக அரசு பள்ளியில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் கொள்கையாகும். இந்த ஆண்டு 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் தேர்வால் மதுரை மாணவி தற்கொலை; துணை முதலமைச்சர் இரங்கல்!