ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிட தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார்.
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள், சென்னைச் சமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதிமுதல் டிசம்பர் 12ஆம் தேதிவரை 120 நாள்களுக்கு 23,846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்கள், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றிலுள்ள ஒரு லட்சத்து,3 ஆயிரத்து,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
இதையும் படிங்க: 'அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள்!'