ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் நான்கு பைகளில் 97 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் இருந்த இருவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், காரை ஓட்டிவந்தவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராகப் பணிபுரியும் பெருமாள் என்பதும் மற்றொருவர் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராகப் பணிபுரியும் மூர்த்தி என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் சேர்ந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் கார், மதுபான பாட்டில்களைப் பறிமுதல்செய்தனர்.
தொடர்ந்து பெருமாள், மூர்த்தி இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். பின் அவர்களை எச்சரித்து பிணையில் விடுவித்தனர்.
இதையும் படிங்க: செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவலரை வெகுமதியுடன் பாராட்டிய எஸ்பி