தனியார் மயம் கைவிடுதல், தொழிலாளர் சட்டம் திருத்தம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்களை வலியுறுத்தி நேற்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று பேருந்துகள் முழு அளவில் இயங்கப்படவில்லை. கர்நாடகம் தமிழகம் இடையே தமிழக பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால் இரு மாநில பயணிகள் பெரும் பாதிக்கப்பட்டனர்.
நகர்ப்புறப் பேருந்துகள் இயங்காததால் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மக்கள் நலன் கருதி இரண்டாவது நாளான இன்று தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 50 விழுக்காட்டினர் வேலைக்கு திரும்பினர். சத்தியமங்கலம் பணிமனையில் இருந்து மைசூரு, பெங்களுரு, சாம்ராஜந்கர், கொள்ளேகால் போன்ற கர்நாடக பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால் பேருந்துகளில் குறைந்தளவே பயணிகள் பயணித்தனர். அதே போல் 50 விழுக்காடு நகர்ப்புற பேருந்துகள் இயங்கப்பட்டன.
இதையும் படிங்க : கடந்த ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்