ETV Bharat / state

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: பதறவைக்கும் சிசிடிவி காட்சி - erode accident death

ஈரோடு: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்
author img

By

Published : Mar 14, 2020, 1:42 PM IST

ஈரோடு பெரியசேமூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரும், அவரது உறவினர் பழனிசாமியும் இன்று காலை பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்றுள்ளனர். இதைப் போலவே, கோவை தனியார் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவர் வல்லரசு, இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - சிசிடிவி காட்சி

இந்நிலையில், முத்துசாமி, பழனிசாமி ஆகிய இருவரும் ஒரு வழிப்பாதையில் வந்து, திடீரென காஞ்சிகோவில் சாலையில் திரும்பியதால் எதிரே வந்த வல்லரசு தனது வாகனத்தை நிறுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியுள்ளார். இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். அருகிலிருந்தோர் கொடுத்த தகவலின்படி, வந்த ஆம்புலன்சில் மூவரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், சிகிச்சை பலனளிக்காமல் அரசுப் போக்குவரத்து ஓட்டுநர் முத்துசாமி உயிரிழந்தார். மற்ற இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - கடலூர் இளைஞர் மீது பாய்ந்தது சைபர் சட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.