ETV Bharat / state

ஜி.எஸ்.டியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் - ஜி.கே. மணி - State President GK Mani congratulates Tamilisai sowndarajan

ஈரோடு: சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழுக்காடு ஜி.எஸ்.டியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார்.

ஜி கே மணி செய்தியாளர்கள் சந்திப்பு
author img

By

Published : Sep 9, 2019, 6:28 PM IST

ஈரோடு மாவட்டம் வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றதற்காக பாமக சார்பாக வாழ்த்துகளையும், இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி மறைவுக்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்தியாளர்களுக்கு ஜி.கே.மணி அளித்த பேட்டி
இந்தியா கடந்த சில மாதங்களாகவே தொழில் வளச்சியில் நலிந்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் அதை கூர்ந்து கவனித்து சிறு, குறு நடுத்தர தொழில்கள் செய்பவர்களுக்கான முன்னுரிமையயையும், மானியத்தையும் வழங்கவேண்டும். அத்தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியை 5 விழுக்காடாக குறைக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டங்களாக பிரித்ததை வரவேற்கிறோம். நிர்வாக வசதிக்காகவும், அரசின் நலத்திட்டங்கள் வேகமாக மக்களுக்கு சென்றடையவும் சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற பெரிய மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஆங்காங்கே தடுப்பணை கட்டி உள்ளதால் நீர் வரத்து குறைந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை மத்திய அரசு தலையிட்டு ஒரு தீர்வுக்கு கொண்டு வரவேண்டும்’ என்றார்.

Intro:சிறு, குறு, நெடுத்தர தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழிக்காடு ஜி.எஸ்.டியை 5 விழிக்காடு ஜி.எஸ்.டியாக குறைக்க வேண்டும். வாணியம்பாடியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி பேட்டி.
Body:

வாணியம்பாடியில் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :-

தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். பாமக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகள்.

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜத்மலாணி மறைவுக்கு பாமக சார்பில் ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கலை தெரிவித்தார்.

இந்திய அளவில் கடந்த சில மாதங்களாக தொழில் வேகமாக நலிந்து வருகிறது. தொழில் முனைவோர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். தொழிலாளர்கள் வேலை இழக்க அபாய நிலைக்கு தள்ளப்பபட்டுள்ளனர். ஆகவே மத்திய, மாநில அரசுகள் கூர்ந்து கவனித்து சிறு, குறு நெடுத்தர தொழில்கள் செய்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அதை ஊக்கபடுத்துவதற்க்கு மாணியம் வழங்க வேண்டும்.

சிறு, குறு, நெடுத்தர தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 விழிக்காடு ஜி.எஸ்.டியை 5 விழிக்காடு ஜி.எஸ்.டியாக குறைக்க வேண்டும்.

தமிழகத்தில் புதியதாக 5 புதிய மாவட்டங்கள் அறிவித்துள்ளது. இன்னும் பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக, அரசின் நலத்திட்டங்களை வேகமாக மக்களுக்கு சென்றடைய பெரிய மாவட்டங்களான சேலம், மதுரை, திருவண்ணாமலை போன்ற பெரிய மாவட்டங்களை மேலும் பிரிக்க வேண்டும்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு அங்காங்கே தடுப்பணை கட்டி உள்ளதால் நீர் வரத்து குறைந்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழக அரசு முடிக்க நடவடிக்கை எடுக்கணும். மத்திய அரசு தலையிட்டு ஒரு தீர்வு கொண்டு வரவேண்டும். ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பனை கட்டக்கூடாது, தமிழ் நாட்டின் உரிமை பாதிக்கிறது என்று நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.