ETV Bharat / state

'எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மையே பாஜக வெற்றிக்கு காரணம்'

ஈரோடு: தேசிய அளவில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினாலே பாஜக வெற்றிபெற்றுள்ளது என்று ஈரோடு தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கணேசமூர்த்தி
author img

By

Published : May 24, 2019, 7:28 AM IST

நாட்டின் 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் மே 23ஆம் தேதியன்று நடைபெற்றது.

இந்திய அளவில் பாஜக அசுர பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக மட்டுமின்றி தனிப்பெரும்பான்மையுடனும் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 37 இடங்களிலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி (மதிமுக) வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்துவந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கணேசமூர்த்தி

இவரது வெற்றியை மதிமுகவினர், திமுகவினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடிவருகின்றனர். அ. கணேசமூர்த்தி ஐந்து லட்சத்து 44 ஆயிரத்து 980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மணிமாறன் (53) மூன்று லட்சத்து 43 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கணேசமூர்த்தி, "வாக்களித்த மக்களுக்கும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினாலே பாஜக வெற்றிபெற்றுள்ளது" என்றார்.

Intro:script in mail

Body:script in mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.