ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ஆர்.என். புதுாரைச் சேர்ந்த பெரியசாமி(47), காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவராக இருந்துவருகிறார். இவர், நடத்திவரும் ஜெராக்ஸ் கடைக்கு சில வாரங்களுக்கு முன்பு வந்த 12 வயது சிறுமிக்கு பெரியசாமி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, பவானி மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, தலைமறைவான பெரியசாமியை காவல் துறையினர் வலைவீசி தேடிவந்தனர். இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர், ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்பின்பு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீதான வழக்குகளை விசாரித்த காவல் துறையினர் பெரியசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கதிரவன், பெரியசாமி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மரணத்தில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் 3 மாதத்திற்குப் பிறகு தோண்டியெடுத்து உடற்கூராய்வு!