ஈரோடு: பவானிசாகர் தாண்டாம்பாளையம் ரோடு பாரதி நகரை சேர்ந்த ஜெகன்(19). கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஜெகனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று(ஏப்ரல் 17) தீர்ப்பளிக்கப்பட்டது
அதில், ’’சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஜெகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. ஐந்து ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி, அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பிட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்!