ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம்-நிர்மலாதேவி தம்பதிக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று நான்கு வயதில் சைலேஷ் என்கிற மகன் இருந்தார்.
இதனிடையே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டுப் பிரிந்த மனைவி நிர்மலாதேவி தனது மகனுடன் பெருந்துறை சீனாபுரம் அருகேயுள்ள காங்கிரசம்புதூர் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில் பெருந்துறை அருகே உறவினர் வீட்டுத் தோட்டத்திலுள்ள சிறிய தொட்டியில் தனது நான்கு வயது மகனுக்கு குழந்தையின் தாயார் நீச்சல் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக நாசிக்குள் அதிகளவில் தண்ணீர் ஏறியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்த உறவினர்கள் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு