ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்தும் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து அவர்களின்சந்தேகப்படும்படியான செயல்பாடுகளை பார்த்தகாவல்துறையினர், அவர்களைவிரட்டிச்சென்று பிடித்து விசாரித்தனர்.
அப்போது காங்கேயத்தைச் சேர்ந்தசெந்தில்(45), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்(28), முருகேசன்(49), அப்துல் சலீம்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களின் இரு சக்கர வாகதனத்தை சோதனையிட்டதில் டேங்கவரில் அனுமதியில்லாத கைத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டவிசாரணையில், தனியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் துப்பாக்கியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து அனுமதியில்லாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதுடன்,4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.