ETV Bharat / state

விருந்தினர் மாளிகையில் குடித்துவிட்டு பெண் தோழிகளுடன் கும்மாளம்போட்ட 4 பேர்...!

ஈரோடு: தலமலை விருந்தினர் மாளிகையில் குடித்துவிட்டு பெண் தோழிகளுடன் கும்மாளம்போட்ட கிராமத்தின் அமைதியை கெடுப்பதாக நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author img

By

Published : Aug 23, 2019, 12:09 PM IST

தலமலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தலமலையில் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் கோவை, ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து பலர், தலமலைக்கு வந்து தங்குவார்கள். நாளடையில் இங்கு ஆண்கள் மட்டும் வந்து தங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தற்போது எல்லை மீறிய அவர்கள் பெண்களும் சேர்ந்துகொண்ட கும்மாளம் போடத் தொடங்கியுள்ளனர்.

தலமலை
தலமலை

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஜோதீஸ்வரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில், கிடா விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுமன் (36) என்பவர், தனது நண்பர்கள் வினோத், கார்த்திகேயன், ஹரீஸ், ஜெகதீஸ், சிவா, நந்து ஆகியோருடன் கலந்துகொண்டார். இதில் கேரளாவைச் சேர்ந்த ஸ்டேனியா, கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்த பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விருந்துக்கு பின் தொழில் ரீதியான பணத்தை பங்கு பிரிப்பதில் சுமனுடன் ஜோதீஸ்வரமூர்த்திக்கு தகராறு ஏற்பட்டது. இருவரிடையே அடிதடி ஏற்பட்டபோது ஜோதீஸ்வரமூர்த்தியின் நண்பர்கள் சுமனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வந்த பெண் தோழிகள் ஸ்டேனியா, பிரியாவையும் ஜோதீஸ்வரமூர்த்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த அடிதடி தகராறின்போது சத்தம் கேட்டு ஓடிவந்த தலமலை கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து குடிபோதையில் கிராமத்தின் அமைதியை கெடுக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஜோதீஸ்வரமூர்த்தி, சார்ல்ஸ், ரகு, கந்தசாமி ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Intro:nullBody:tn_erd_03_sathy_guest_house_photo_tn10009

தலமலை கெஸ்ட் ஹவுசில் குடித்து விட்டு பெண் தோழிகளிடம் கும்மாளம் போட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

கிராமத்தின் அமைதியை கெடுப்பதாக கிராமமக்கள் புகார் எதிரொலி

சத்தியமங்கலம் அடுத்த தலமலையில் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் இதமான கால நிலை நிலவுவதால் கோவை, ஈரோடு பகுதியில் இருந்து இளைஞர்கள் தலமலை வந்து தங்குவார்கள். நாளடையில் ஆண்கள் மட்டும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வந்த நிலையில் பெண்களும் சேர்ந்து கொண்ட புது சம்பவத்தால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கோவையைச் ஜோதீஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் கிடா விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுமன் (36), என்பவர் தனது நண்பர்கள் வினோத், கார்த்திகேயன், ஹரீஸ், ஜெகதீஸ், சிவா, நந்து ஆகியோருடன் கலந்துகொண்டனர். இதில் பெண் தோழிகள் கேரளாவைச் சேர்ந்த ஸ்டேனியா, கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்த பிரியா ர் ஆகியோரும் கலந்து கொண்டனர். விருந்துக்கு பின் தொழில் ரீதியான பணம் பங்குபிரிப்பதில் சுமனுடன் ஜோதீஸ்வரமூர்த்தி தகராறு ஏற்ட்டது. இருவரிடையே அடிதடி ஏற்பட்டபோது ஜோதீஸ்வரமூர்த்தியின் நண்பர்கள் சுமனை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்ற வந்த பெண் தோழிகள் ஸ்டேனியா, பிரியாவையும் ஜோதீஸ்வரமூரத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த அடிதடி தகராறின்போது சப்தம் கேட்டு ஓடிவந்த தலமலை கிராமமக்கள் போலீஸில் புகார் தெரிவித்து குடிபோதையில் கிராமத்தில் அமைதியை கெடுக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஜோதீஸ்வரமூர்த்தி, சார்ல்ஸ், ரகு மற்றும் கந்தசாமி ஆகியோர் ஆசனூர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Conclusion:null

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.