ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கெட்டிசெவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முயற்சியால், அரசு மற்றும் எல்&டி என்ற தனியார் நிறுவனம் மூலம் பள்ளியை சீரமைக்க பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் ரூ. 65 லட்சம் நிதி திரட்டி, கட்டிட பணியானது கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கலை வண்ணங்களுடன் அரசு பள்ளி
ஆங்கில வழியில் கல்வி என்பதால் அதற்கு தேவையான உபகரணங்கள், ஆன்லைன் மூலம் பாடம் கற்க ஸ்மார்ட் போர்டு, பல வண்ணங்களில் மாணவர்கள் இருக்கைகள், பெஞ்ச் உள்ளிட்ட வசதிகளுடன் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கு தகுந்தாற்போல பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்படும். இந்த பள்ளியை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டைன் நேரில் சென்று மாணவர் சேர்க்கை குறித்தும், பள்ளி கட்டிட பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கிராமத்திலுள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயில ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.