ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சில நாள்களாக சசிகலா உரையாடிவரும் ஆடியோ வெளியானது. பவானிசாகர் சட்டப்பேரவையில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. வரதராஜ், சசிகலாவுடன் பேசும்போது நீங்க அதிமுகவுக்கு மீண்டும் வரவேண்டு்ம் என்றார்.
அதிமுகவிலிருந்து நீக்கம்
அதேபோல, கோபிசெட்டிபாளையம் முன்னாள் மக்களவை உறுப்பினர் வி.கே. சின்னச்சாமி, சசிகலாவுடன் பேசும்போது, ”எடப்பாடி பழனிசாமி நன்றி மறந்துவிட்டார்” என குறிப்பிட்டார்.
இந்த ஆடியோ அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று (ஜூன் 14) சென்னையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக முன்னாள் மக்களவை உறுப்பினர் வி.கே. சின்னச்சாமி மீது அதிமுக நடவடிக்கை எடுத்து, அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியை நீக்கியுள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தெற்கு ஒன்றிய செயலாளர் வி.சி. வரதராஜ் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கருப்பணன் கூறினார்.