ETV Bharat / state

முன்னாள் சூதாட்ட கிளப் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை - காவல்துறை விசாரணை!

ஈரோடு: பவானி அருகே முன்னாள் சூதாட்ட கிளப் உரிமையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Former casino club owner stabbed to death - Police investigation
author img

By

Published : Jul 1, 2020, 9:44 PM IST

ஈரோடு மாவட்டம் பவானி ராயல் தியேட்டர் இரண்டாவது வீதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (எ)மெட்ராஸ் மணி (50). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சூதாட்ட கிளப் வைத்து நடத்தி வந்துள்ளார். தற்போது சூதாட்டம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இவர் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு கொலை வழக்கும் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து அருகிலிருந்தவர்கள் பவானி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மணிகண்டனின் முகத்தில் மிளகாய் பொடி தூவப்பட்டு, நெஞ்சு, முதுகு என பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், கொலையாளியை தேடி வருகின்றனர். மேலும் மணிகண்டன் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.