ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் (Sathyamangalam Wildlife Sanctuary) கொண்டப்பநாயக்கன்பாளையம் மாகாளி அம்மன் கோயில் அருகே விவசாயி ஞான சேகரன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் வனத்தையொட்டியுள்ள அவரது தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை தாக்கியது. சிறுத்தையை கண்டு ஆடுகள் மிரட்சியுடன் சத்தம் போட்டதால், விவசாயி ஞானசேகரன் ஓடி வந்து பார்த்தார். அப்போது சிறுத்தையை பார்த்ததாக பக்கத்து தோட்டத்துக்காரர்கள் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, அங்கு விவசாயிகள் தடியுடன் வந்ததை பார்த்த சிறுத்தை ஆட்டை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பியோடியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் அங்கு பதிவாகியிருந்த கால்தடயத்தை ஆய்வு செய்து சிறுத்தை என உறுதி செய்தனர்.
சிறுத்தையின் கால்தடயங்கள் உள்ள இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தினை வனப்பணியாளர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும், சிறுத்தையால் உயிரிழந்த ஆட்டுக்கு நிவாரணம் வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:'தனியார் பள்ளிகளுக்கு இனிமேல் நிரந்தர அங்கீகாரம் கிடையாது'