ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. யானைகள் தண்ணீர், தீவனம் தேடி மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. தற்போது யானைகள் இடம்பெயர்ந்து வருவதால் பண்ணாரி, திம்பம், ஆசனூர் வரை யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் ஒற்றை யானை சாலையின் குறுக்கே சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக திரிந்த யானையால், வாகன ஓட்டிகள் திம்பம் மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்தி காத்திருந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதை குறுகலான வளைவுப்பாதையில் எதிரே வரும் யானை தெரியாதபடி உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மெதுவாகவும் பாதுகாப்பாகவும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
திம்பம் சாலையில் வாகன ஓட்டிகள் இளைப்பாறாமல் தொடர்ந்து பயணிக்குமாறு வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டு யானைகள்