ETV Bharat / state

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

ஈரோடு: மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் மாவட்ட ஆட்சியரால் தொடங்கிவைக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

author img

By

Published : Feb 28, 2020, 4:18 PM IST

ஈரோடு மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கிவைத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியதாவது, கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ள நிலையில், கால்நடை வளர்ப்பில் கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

பொதுவாக கலப்பின மாடுகளை கால் மற்றும் வாய் நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும்.

எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு விழுக்காடு உயரும். அதனால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரண்டு முறை, இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டில் இன்று முதல் வருகிற மார்ச் மாதம் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள், குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், அனைத்து ஊராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றில் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்காக, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 100 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, 14 வட்டாரத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

நடப்பாண்டில் கால்நடைகளுக்கு காதில் அடையாள வில்லைகள் பொருத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்திக் கொள்ள வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள பசு, எருமைகளைத் தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்துச் சென்று தவறாமல் தடுப்பூசி போட்டு, கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.