ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் சுமார் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, சம்பங்கி ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள், கோவை, மைசூர், பெங்களூரு, கேரளா, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது முகூர்த்த சீசன் என்பதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் வட்டத்தில் தினம்தோறும் 5,000 டன் பூக்கள் வந்த நிலையில், பனிப்பொழிவு காரணமாக பூக்களின் மொட்டு சிறுத்து பச்சைப் புழு நோய் பூக்களைத் தாக்கியுள்ளது.
இதனால் பூக்களின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. பூக்கள் உற்பத்தி சரிந்ததால் அவற்றின் தேவை அதிகரித்து, கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, இரண்டாயிரம் ரூபாயாக தற்போது உயர்ந்ததுள்ளது.
இந்நிலையில், பனிக்காலம் முடியும் வரை பூக்களின் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என விவசாயிகள் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நேந்திரம் வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை