ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை மற்றும் சம்பங்கிப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் பூக்களை பறித்து சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கத்தில் வியாபாரிகள் முன்னிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், வெயில் தாக்கம் குறைந்ததோடு, இரவு நேரங்களில் பனிப்பொழிவதால் பூக்களின் உற்பத்தியானது வெகுவாக பாதிக்கப்பட்டது. தினந்தோறும் 10 டன் மல்லிகைப்பூக்கள் வரத்தகமாகி வந்த நிலையில், தற்போது அரை டன்னாகவும், சம்பங்கி 1 டன்னாகவும் சரிந்தது.
கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூக்கள் அமெரிக்கா, சார்ஜா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் பூக்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டது. இதனால் கிலோ ரூ.2200க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.3600 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல முல்லை ரூ.1120, காக்கடா ரூ.900, செண்டு ரூ.100, ஜாதி ரூ.700, சம்பங்கி ரூ.100 ஆக விற்கப்பட்டது. பூக்களின் இந்த திடீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!