ETV Bharat / state

கரைபுரண்டு ஓடும் மாயாறு: கிராம மக்கள் ஆபத்தான பயணம் - மாயாறு

ஈரோடு: மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கிராம மக்கள் பரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

erode
author img

By

Published : Aug 8, 2019, 9:41 AM IST

Updated : Aug 8, 2019, 4:45 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இங்கு 5,000க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்.

மலைமுகடுகள் சூழப்பட்ட இக்கிராமத்தில் மாயாறு ஓடுகிறது. கிராம மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், சாகுபடி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் சமவெளிப் பகுதியான சத்தியமங்கலத்துக்கு செல்லவேண்டும். மேலும், இவர்களுக்கு தேவையான நியாய விலை பொருட்களை லாரி மூலம் மாயாற்றை தாண்டி எடுத்துச் செல்வர்.

இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழையால் தற்போது மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தெங்குமரஹாடா கிராமத்துக்கும் பவானிசாகருக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கரையோரத்தில் படகுக்காக காத்திருக்கும் கிராம மக்கள்
கரையோரத்தில் பரிசலுக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

இதனிடையே, நேற்று மாலை முதல் இக்கிராம மக்கள் பரிசல் மூலம் வெள்ளத்தில் செல்கின்றனர். இந்த பயணம் ஆபத்து என்பதை உணர்ந்தும் வேறுவழியின்றி இதனை மேற்கொண்டுவருகின்றனர்.

வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பரிசலில் பயணிக்கும் கிராம மக்கள்

வெள்ள அபாய காலங்களில் மக்கள் இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் மேற்கொள்வதை தடுக்க மாயாற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Intro:Body:tn_erd_01_sathy_mayaru_river_vis_tn10009
tn_erd_01a_sathy_mayaru_river_vis_tn10009

மாயாற்றில் வெள்ளப்பெருக்கு:

கரைபுரண்யோடும் மாயாற்றில் நாட்டுப்படகு மூலம் ஆபத்தான பயணத்தை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்தல்

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனத்தையொட்டி தெங்குமரஹாடா கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றிலும் மலைமுகடுகள் மற்றும் மாயாறு ஓடுகிறது. கிராமமக்களுக்கு தேவையான பொருள்கள் மற்றும் சாகுபடி செய்த விளைபொருள்களை சமவெளப் பகுதியான சத்தியமங்கலத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வார்கள். இக்கிராமத்துக்கு தேவையான ரேசன் பொருள்கள் லாரி மூலம் மாயற்றை தாண்டி எடுத்துச் செல்வர். இந்நிலையில், கூடலூரில் பெய்த கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தெங்குமரஹாடா கிராமத்துக்கும் பவானிசாகர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை முதலே வெள்ளம் அதிகமாக இருப்பதால் கிராமமக்கள் நாட்டு படகு மூலம் கரையை கடந்து செல்கின்றனர். பாய்ந்து வரும் வெள்ளத்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் ஆற்றை கடக்க கிராமமக்கள் தயங்குகின்றனர்.இருப்பினும் வேறு வழியின்றி மாயாற்றில் வெள்ளம் தணியும் காத்திருக்க வேண்டியுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஆபத்தான பயணம்மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற வெள்ள அபாய காலங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்கக, புதிய பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
Last Updated : Aug 8, 2019, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.