ETV Bharat / state

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்றங்களை தடுக்கலாம் - எஸ்.பி. சக்தி கணேசன்! - குற்றங்களைக் கண்டறிய தனிப்படை

ஈரோடு: வீடுகளில் நிகழும் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் மாவட்டத்திலுள்ள அனைவரும் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார்.

fixing-surveillance-camera-on-homes-can-prevent-crimes-sp-shakti-ganesan

author img

By

Published : Feb 18, 2020, 12:10 PM IST

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதும், சாலையோரங்களில் நடக்கும் அனைத்து வயது பெண்களிடமும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் களவாடப்பட்ட 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 105 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன்பின் கொள்ளை, வழிப்பறிகளில் களவாடப்பட்ட தங்க நகைகளை மீட்டு கொள்ளையர்களைக் கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆறுக்கும் மேற்பட்ட காவல்நிலைய எல்லைக்குள் நடைபெற்ற வழக்குகள் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் குற்றவாளியின் முகம் பதிவாகியிருந்ததன் அடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் 16 வழக்குகளில் தொடர்புடைய மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதே கும்பல் நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியுள்ளனர்.

வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்றங்களை தடுக்கலாம்

மேலும், வீடுகளில் நிகழும் குற்றங்களைத் தடுத்திடவும் குற்றவாளிகளைப் பிடித்திடவும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்திட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் புள்ளி விவரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செங்கோட்டையன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.