ETV Bharat / state

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளிக்கு ஏற்பட்ட சோகம்!

author img

By

Published : Sep 23, 2019, 5:04 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குடிசை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில், குடிசையினுள் தூங்கிக் கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

fire accident at home

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னகுழி தாசில்தோட்டத்தில், மரம் ஏறும் தொழிலாளியான குமார் தன் தாய் வள்ளியம்மாளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர், மது போதையில் வீட்டிற்கு வந்து தனது தாயிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் குமாரின் தாய் கோபமடைந்து பக்கத்து வீட்டில் போய் படுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து குமார் மட்டும் தனியாக அவரது குடிசை வீட்டில் உறக்கியுள்ளார். இந்நிலையில், அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் எதிர்பாராவிதமாக குடிசையில் தீ பற்றியுள்ளது.

mafire accident
தீ விபத்தில் உயிரிழந்த குமார்

குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதைப் பார்த்து அலறியடித்து ஓடிவந்த குமாரின் தாயார், குமார் உடல் கருகி உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். வள்ளியம்மாளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து, சிறுவலூர் காவல் துறைக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட குடிசை வீடு

சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினரும், கிராம நிர்வாக அலுவலரும் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Intro:Body:tn_erd_03_sathy_man_death_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சன்னக்குழி தாசில்தோட்டத்தில் குடிசை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் குடிசையினுள் தூங்கிக்கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். தீவிபத்து குறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னகுழி தாசில்தோட்டத்தில் குடிசை வீட்டில் அம்மாவுடன் குடியிருந்து வரும் மரம் ஏறும் தொழிலாளியான குமார் அதிகளவு மது போதையில் வீட்டிற்கு வந்து தனது தாய் வள்ளியம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் குமாரின் தாய் அவருடன் கோபித்துக்கொண்டு பக்கத்து வீட்டில் போய் படுத்துக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து குமார் மட்டும் தனியாக அவரது குடிசை வீட்டில் உறக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டதை அவரது தாய் வந்து பார்த்தபோது குடிசை வீடு தீவிபத்தில் முழுவதும் எரிந்து சேதம் ஏற்பட்டிருந்துள்ளது. குடிசையினுள் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குமார் உடல் கருகி உயிரிழந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் சத்தம் போடவே அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறுவலூர் காவல்துறைக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சிறுவலூர் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். . குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி தீவிபத்தில் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தினால் இப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.