ETV Bharat / state

மானை வேட்டையாடிவர்களுக்கு 5 லட்சம் அபராதம்! - மான் வேட்டை

ஈரோடு: பண்ணாரி வனப்பகுதியில் மானை வேட்டையாடிய நான்கு பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மான்
author img

By

Published : Jul 14, 2019, 12:20 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டுள்ளதாக பவானிசாகர் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் ஜான்சன் தலைமையில் வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒரு கார் நின்றிருந்தது.

மேலும், நான்கு பேர் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்ததைக் கண்டு வனத் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது, நடத்திய விசாரணையில் புள்ளிமான் வேட்டையாடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட இரட்டைக் குழல் துப்பாக்கி, மானின் உடல் பறிமுதல் செய்யப்பட்டன.

மான் வேட்டையாடியவர்கள்

விசாரணையில் மானை வேட்டையாடிய நபர்கள் நாமக்கல் மாவட்டம் நடந்தையைச் சேர்ந்த பூபதி (26), ஈரோடு தாமரைப் பாளையம் ஊஞ்சனூரைச் சேர்ந்த கார்த்திக் (26), மொடக்குறிச்சி பொன்னம்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் (36), கொடுமுடி கருத்திப் பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் (40) என்பது தெரியவந்தது.

நான்கு பேரையும் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில் ஒருவருக்கு தலா ரூ 1.25 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் அபராதக் கட்டணம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Intro:tn_erd_01_sathy_deer_fine_vis_tn10009Body:tn_erd_01_sathy_deer_fine_vis_tn10009

பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ 5 லட்சம் அபராதம்

பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்குட்ப்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் மான் வேட்டையில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் ஜான்சன் தலைமையில் வனப்பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒரு கார் நின்றிருந்தது. வனப்பகுதியில் 4 நபர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்ததைக்கண்டு வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது காரில் புள்ளிமான் வேட்டையாடி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி மற்றும் மானின் உடல் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மான் வேட்டையாடிய நபர்கள் நாமக்கல் மாவட்டம் நடந்தையை சேர்ந்த பூபதி(26), ஈரோடு தாமரைப்பாளையம் ஊஞ்சனூரை சேர்ந்த கார்த்திக்(26), மொடக்குறிச்சி பொன்னம்பாளையத்தை சேர்ந்த சதாசிவம்(36), கொடுமுடி கருத்திப்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதரன்(40) என்பது தெரிய வந்தது. 4 பேரையும் சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில் ஒருவருக்க தலா ரூ 1.25 லட்சம் வீதம் ரூ.5 லட்சம் அபராதக்கட்டணம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.