ETV Bharat / state

கொங்கு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - erode final voters list

ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய கொங்கு மண்டல மாவட்டங்களில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

ஈரோடு இறுதி வாக்காளர் பட்டியல்  கோவை இறுதி வாக்காளர் பட்டியல்  திருப்பூர் இறுதி வாக்காளர் பட்டியல்  சேலம் இறுதி வாக்காளர் பட்டியல்  erode final voters list  final voters list
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
author img

By

Published : Feb 15, 2020, 9:48 AM IST

தமிழ்நாடு முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திற்குள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிசெட்டிப்பாளையம், பவானி, அந்தியூர், பவானிசாகர், பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று வெளியிடப்பட்டது.

மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியல்களைத் தனித் தனியாக வெளியிட்டார். அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர்

அப்போது அவர் கூறுகையில், கடந்த மாதத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 42 ஆயிரத்து 920 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்கள் என ஆறு ஆயிரத்து 601 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆண் வாக்காளர்கள் ஒன்பது லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர், பெண் வாக்காளர்கள் ஒன்பது லட்சத்து 84 ஆயிரத்து 395 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 94 பேர் என ஈரோடு மாவட்டத்திற்குள்பட்ட எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 19 லட்சத்து 25 ஆயிரத்து 668 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வரவிருக்கின்ற நகர்ப்புறத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் மாவட்டம் முழுவதும் மாவட்டத் தேர்தல் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று காலை வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ராமன், " இறுதிவாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 83 ஆயிரத்து 369 பேர், பெண் வாக்காளர்கள் 14 லட்சத்து 85 ஆயிரத்து 133 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 171 பேர் என மொத்தம் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர்

வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் மற்றும் வெளியூர் சென்றவர்கள் யார் யார் என ஆய்வு செய்த பின்னர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்ய பொதுமக்களின் வசதிக்காக நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடந்தது. இதன் மூலம் ஒரு லட்சத்து 769 படிவங்கள் பெறப்பட்டன. பின்னர் படிவங்களை ஆய்வு செய்து தகுதியானவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது" என்றார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதன்பிறகு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்தப் பணிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்டத்தில் 2, 484 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 756 பேர், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 448 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 277 பேர் என மொத்தம் 23 லட்சத்து ஆயிரத்து 481 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்" என்றார்.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

கோவை

கோவை மாவட்டத்திற்குட்பட்ட பத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் 14,79,789 பேர், பெண் வாக்காளர்கள் 15,11,767, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 370 பேர் என மொத்தம் 29,91,923 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கோவை மாவட்ட ஆட்சியர்

இதையும் படிங்க: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.