ETV Bharat / state

பெற்ற மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை - மகளிர் நீதிமன்றம்! - Father and Daughter Rape Case

ஈரோடு: பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

police produced mohan in court
author img

By

Published : Oct 26, 2019, 3:57 AM IST

ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மோகன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு மோகன் தனது 13 வயது மகளை வற்புறுத்தியும், மிரட்டியும் பலமுறை பாலியல் வல்லுறவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நன்றாக படித்து வந்த மாணவி சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததை அறிந்த ஆசிரியர், மாணவியிடம் விசாரித்தபோது நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவி ஈரோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர், மோகனை கைது செய்தனர்.

மோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர்

இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதையும் படிங்க: ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன் ஓட்டம்...! போலீஸ் வலை

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.25

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை.....

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Body:ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன். இவர் கடந்த 2017 ம் ஆண்டு தனது 13 வயது மகளை கட்டாயப்படுத்தி மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் நன்றாக படித்து வந்த மாணவி சிலதினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் ஆசிரியர் கேட்டபோது நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனையடுத்து ஈரோடு மகளீர் காவல்நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் மோகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு இன்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Conclusion:மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.