ஈரோடு மாவட்டம், அரச்சலூரில், விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வதில் குளறுபடிகள் செய்வதாகக் கூறி ஈஐடி பாரி புகழூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து, அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகழூரில் உள்ள அந்த சர்க்கரை ஆலையின் அறுவடைக்காக அரச்சலூர் பகுதியில் விவசாயிகள் பதிவு செய்து கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் 10 மாதங்களில் வெட்டப்பட வேண்டும். ஆனால், 21 மாதங்களாகியும் கரும்பை வெட்டாமல் நிறுவனம் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது.
இதனால், சுமார் 100 ஏக்கருக்கும் மேலான கரும்புகள் உரிய காலத்தில் வெட்டப்படாமல், எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், வெட்டப்பட்ட கரும்புகளுக்கான தொகையையும் நான்கு மாதங்களாக பட்டுவாடா செய்யவில்லை என குற்றம்சாட்டினர். விவசாயிகள் வருவதை அறிந்த கரும்பு நிறுவன ஊழியர்கள், அலுவலகத்தை திறக்காமல் பூட்டிச்சென்றனர். இதனால், அவர்கள் வரும் வரை காத்திருந்தனர்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக் CEO மார்க் ஸுக்கர்பெர்க் அடுத்த ஆண்டு விலகல்? - மெட்டா விளக்கம்