ETV Bharat / state

‘கீழ்பவானி கால்வாய் திட்டத்தை நவீனப்படுத்த வேண்டும்’ - விவசாயிகள் வலியுறுத்தல்! - கால்வாய் உடைப்பு திட்டமிட்ட சதி

கீழ்பவானி கால்வாயை ரூ.710 கோடி திட்ட மதிப்பீட்டின் படி முழுமையாக நவீனப்படுத்த வேண்டும் என நீர் பாசன விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தினர்.

கீழ்பவானி கால்வாய் திட்டத்தை நவீனப்படுத்த வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்!

author img

By

Published : Dec 18, 2022, 10:22 PM IST

கீழ்பவானி கால்வாய் திட்டத்தை நவீனப்படுத்த வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்!

ஈரோடு: கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. கீழ்பவானி கால்வாயை ரூ.710 கோடி திட்ட மதிப்பீட்டின் படி முழுமையாக நவீனப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாய் உடைந்த விவகாரத்தில், பாஜக தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூட்டத்தில் கண்டனம் தெரிவித்த அவர்கள், கால்வாய் உடைப்பு திட்டமிட்ட சதி என தான்தோன்றி தனமாக கருத்துக்களை வெளியிட்ட பாஜக விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

கீழ்பவானி கால்வாய் பக்கவாட்டுச் சுவர் பல இடங்களில் உடைந்து காட்சியளிப்பதுடன் இன்னும் பல இடங்களில் உடைய வாய்ப்பு இருப்பதால் முழு கொள்ளளவான 2ஆயிரத்து 300 கனஅடி முழுமையாக தண்ணீர் திறக்க முடியாத நிலையில் கால்வாய் உள்ளது.

எனவே உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், கிளை கால்வாய்களில் முழு அளவு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும். அன்னூர் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்தால் இதில் முழுமையாக பவானிசாகர் அணையும் கீழ்பவானி பாசன பகுதிகளும் பாதிக்கப்படும் என்பதால் அரசு இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:குன்னூர் அரசு மருத்துவமனைக்குள் திரியும் எலிகள் - அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.