ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அடுத்த மூலக்கரையை சேர்ந்தவர் பூபதி. இவரது விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகள் சேதமடைகின்றனர்.
இதனையடுத்து அங்குள்ள விவசாயிகள் விளைநிலத்தின் வழியாக மின் கோபுரம் அமைப்பதற்கு தடைக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அனுமதியின்றி மின்வாரிய அலுவலர்கள் காவல்துறையின் உதவியுடன் தொடர்ந்து பணி செய்து வருவதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.