ETV Bharat / state

உரிய விலை கிடைக்காததால் விரக்தி, செண்டுமல்லியை மேய்ச்சலுக்கு விட்ட விவசாயிகள் - பத்தாயிரம் ஏக்கர் செண்டு மல்லி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செண்டுமல்லிக்கு உரிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயிகள் பூக்களை மேய்ச்சலுக்கு விட்டனர்.

செண்டுமல்லிப்பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி!

author img

By

Published : Sep 29, 2022, 8:44 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பூக்கள் உள்ளூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த மாதம் சுபமுகூர்த்த நாட்களில் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

செண்டுமல்லிப்பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி!

இந்த மாதம் சுபமுகூர்த்த நாட்கள் இல்லாததால் செண்டுமல்லிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செலவை கூட ஈடுகட்ட முடியாத விலைக்கு செண்டுமல்லி விற்பனையாவதால், பூக்களை பறிக்காமலேயே விவசாயிகள் விட்டனர். ஒரு கிலோ பூக்களை பறிக்க கூலி ரூ.10ஆக இருக்கும் போது அதன் விலையும் ரூ.10ஆக இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதனால் பல்வேறு விவசாயிகள் செண்டுமல்லி பூக்களை மாடுகளின் மேய்ச்சலுக்காக விட்டனர். இத குறித்து விவசாயி தரப்பில், செண்டுமல்லி பூக்கள் விற்கும் விலையை விட உற்பத்தி செலவு அதிகம் என்பதால் செடிகளில் இருக்கும் பூக்களை பறிக்காமலே விட்டுவிட்டோம். செண்டுமல்லி ஆலைகளில் கிலோ ரூ.7க்கு கொள்முதல் செய்வதால் பூ விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மானியம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கொந்தகை அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான வாள் கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.