ETV Bharat / state

விதை வெங்காயம் கிலோ ரூ. 190க்கு விற்பனை - விவசாயிகள் கவலை - Seed Onion increase in Erode

ஈரோடு: சத்தியமங்கலத்தில் விதை வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

விதை வெங்காயம் கிலோ ரூ. 190க்கு விற்பனை
விதை வெங்காயம் கிலோ ரூ. 190க்கு விற்பனை
author img

By

Published : Jan 23, 2020, 5:15 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வார சந்தை தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய சந்தையாகும். 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து மளிகைப் பொருள்களை வாங்கிச்செல்வது வழக்கம்.

குறிப்பாக, புளியம்பட்டி சந்தையில் விற்பனை செய்யப்படும் விதை வெங்காயத்தை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் வாங்கி சென்று தங்களது விவசாய தோட்டங்களில் நடவு செய்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் விவசாயிகள் விதை வெங்காயத்தை வாங்கிச்சென்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டினர்.

இச்சந்தையில் மட்டும் இரண்டு வாரங்களாக வியாழனன்று விதை வெங்காயம் 600 மூட்டைகள் வரை வரத்து இருந்தது. அப்போது விதை வெங்காயம் கிலோ ரூ. 120 முதல் ரூ. 130 வரை விற்பனையானது. வழக்கமாக 600 மூட்டைகள் வரை வரத்து இருந்த நிலையில் இன்று 60 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விதை வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 190க்கு விற்பனையானது.

இதனால் விதை வெங்காயம் வாங்க ஆர்வத்துடன் வந்த விவசாயிகள் விலை அதிகரிப்பின் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சமையலுக்கு பயன்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனையானது.

விதை வெங்காயம் கிலோ ரூ. 190க்கு விற்பனை

இதையும் படிங்க: இல்லத்தரசிகளின் கண்ணீரை கண்டுகொண்டதா வெங்காயம்; விலையில் சற்று சறுக்கல்!

Intro:Body:tn_erd_04_sathy_seed_onion_sale_vis_tn10009

கிலோ ரூ.190 க்கு விற்பனை:
விலை அதிகரிப்பால் விதை வெங்காயம் வாங்காமல் திரும்பி சென்ற விவசாயிகள்

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காயம் விலை அதிகரிப்பால் விவசாயிகள் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

சத்தியமங்கலகம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காயம் கிலோ ரூ.190 க்கு விற்பனையானதால் விதை வெங்காயம் வாங்க வந்த விவசாயிகள் வாங்காமல் திரும்பி சென்றனர். புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை தமிழகத்தில் பொள்ளாச்சி அடுத்தபடியாக 2 பெரிய சந்தையாகும். 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். புளியம்பட்டி சந்தையில் விற்பனை செய்யப்படும் விதை வெங்காயத்தை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வாங்கி சென்று தங்களது விவசாய தோட்டங்களில் நடவு செய்வது வழக்கம். விதை வெங்காயம் 3 மாதம் வரை பாதுகாப்பாக வைத்து முளைப்பு வந்த பின் விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த 2 மாதங்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் விதை வெங்காயம் வாங்கிச்சென்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டினர். இச்சந்தையில் மட்டும் வியாழனன்று விதை வெங்காயம் 600 மூட்டைகள் வரை வரத்து இருப்பது வழக்கம். கடந்த 2 வாரங்களாக விதை வெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையான நிலையில் இன்று சந்தைக்கு விதை வெங்காயம் வரத்து கணிசமாக குறைந்தது. வாக்கமாக 600 மூட்டைகள் வரை வரத்து இருந்த நிலையில் இன்று 60 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விதை வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.190 க்கு விற்பனையானது. இதனால் விதை வெங்காயம் வாங்க ஆர்வத்துடன் வந்த விவசாயிகள் விலை அதிகம் என்பதால் வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். விதை வெங்காயம் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சமையலுக்கு பயன்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.