ETV Bharat / state

யானை விரட்டியதில் குழிக்குள் விழுந்து உயிர் தப்பிய விவசாயி! - elephant chased farmer

ஈரோடு: யானை விரட்டியதில் குழிக்குள் விழுந்து உயிர் தப்பிய விவசாயி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர் தப்பிய விவசாயி சரவணன்
author img

By

Published : Sep 3, 2019, 9:00 AM IST

ஈரோடு தாளவாடி அருகே எட்டிக்குட்டை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் ஜீர்கள்ளி வனப்பகுதியில் உள்ள தனது கரும்பு தோட்டத்தில் காவலுக்காக இருந்தபோது அந்த தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.

அப்போது யானையை பார்த்து டார்ச் லைட் அடித்த சரவணனை தாக்க யானை ஓடிவந்தது. இதனால் யானையிடமிருந்து தப்பிக்க ஓடிய அவர் அருகில் உள்ள குழிக்குள் தவறி விழுந்தார்.

அதன்பிறகு குழிக்குள் சப்தம் வருவதை கேட்ட உறவினர்கள் சரவணனை மீட்டு தாளவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Intro:Body:யானை தாக்கி விவசாயி படுகாயம்

--
tn_erd_07_sathy_elephant_attack_photo_tn10009

தாளவாடி அருகே ஹீரகள்ளி வனப்பகுதி எட்டிக்குட்டை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). விவசாயி. வனப்பகுதியையொட்டியுள்ளதோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்..

வனத்தில் இருந்து வரும் வனவிலங்குகள் பயிரை சேதப்படுத்துவதால் தோட்டத்தில் காவலுக்கு இருந்து உள்ளார். அப்போது அந்த தோட்டத்துக்குள் ஒற்றை யானை வந்தது. யானையை பார்த்து டார்ச் லைட் அடித்துள்ளார். யானை லைட்டை பார்த்து அதை நோக்கி ஓடிவந்தது. இதனால் யானையிடமிருந்து தப்பிக்க ஓடினார். அப்போது அருகில் உள்ள குழிக்குள் தவறி விழுந்தாார். குழிக்குள் சரவணன் கிடப்பதை பார்த்து யானை அங்கிருந்து புறப்பட்டது. குழிக்குள் சப்தம் வருவதை பார்த்த உறவினர்கள் சரவணனை மீட்டு தாளவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேல் சிகிச்சைக்காக அவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஜீர்கள்ளி வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.