ETV Bharat / state

காதல் மணம் செய்த பெண் மர்ம மரணம்!- கணவன் வீட்டார் மீது புகார் தெரிவித்து போராட்டம்

young girl murder issue: கவுந்தப்பாடி பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட தங்கள் மகளை அவரது கணவர் வீட்டார் கொலை செய்துள்ளதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண் வீட்டார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து போராட்டம்
மகளை கொலை செய்த கணவன் வீட்டார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 4:04 PM IST

மகளை கொலை செய்த கணவன் வீட்டார்

ஈரோடு: காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண்ணை கணவன் வீட்டார் கொலை செய்ததாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பெண் வீட்டார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மென்பொருள் பணியாளரான இவரது மகள் பூரணியை கடந்த 2022ம் ஆண்டு கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த மதன் குமார் என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்தாகவும் சொத்துக்களை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை தந்தால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து பூரணி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டடு குழந்தைகள் பிறந்த போதும் கூட பெண் வீட்டாரை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் உடல் நிலை குறைவால் பூரணி இறந்து விட்டதாக பெண் வீட்டாருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோபி வருவாய் கோட்டாட்சியர் உடற்கூறு ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.. 3 பேர் அதிரடி கைது!

இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூரணியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் பூரணி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது செரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மனைவியை கொலை செய்த கணவர் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்யக் கோரி பெண்ணின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கவுந்தபாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த புகார் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கோபி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூரணி வீட்டார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பெண்ணின் இறப்புக்கு நீதி கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதியளித்தன் பேரில் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: தென்காசி பெண்ணின் மொபைல் எண்ணை தவறான செயலுக்கு பயன்படுத்திய கோவை இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.