ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொள்கைகளைப் பற்றி பேசுவதை விட தன்னைப் பற்றி அதிகம் பேசி வருகிறார். அரசியல் களத்திலே தேர்தல் வெற்றி என்பதுதான் அடையாளப்படுத்தும் அவர் எண்ணங்களை, கொள்கைகளை மக்கள் ஒப்புக் கொண்டதாக அர்த்தமாகும். பாஜக அண்ணாமலை சந்தித்த தேர்தலிலே தோல்வியுற்று இருக்கிறார்.
தானும் தனது கட்சியும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களும் நாங்கள் அதிமுகவுக்கு இணையாக வளர்ந்து விட்டோம் என்றும், நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்று கூட பேசுகின்ற நிலைகளை பார்க்க முடிகிறதது. அண்ணாமலை தனது செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை பரிசோதித்து பார்க்க அருமையான வாய்ப்பு வந்திருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அண்ணாமலை போட்டியிடக்கூடிய தைரியம் இருக்கிறதா போட்டியிட்டு பார்த்து விடுங்கள் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா எவ்வளவு பேர் வாக்களிக்கிறார்கள் அதை பொருத்து உங்கள் செயல்பாடுகளை நடைமுறைகளை மாற்றிக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கேரளாவை பின்பற்றி நலத்திட்டங்களை செய்க" தமிழ்நாடு அரசுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் கோரிக்கை!