ETV Bharat / state

எஸ்.பி அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி! - Erode

ஈரோடு: குடும்ப பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மூன்றுபேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்
author img

By

Published : May 16, 2019, 7:30 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த டி.ஜி புதூரைச் சேர்ந்தவர் சின்னான். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தம்பதியிடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கணவர் சின்னானிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மஞ்சுளா மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சின்னான் அதேபகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதையறிந்த முதல்மனைவி மஞ்சுளா தனது நண்பரான செந்திலை கடந்த ஜனவரி மாதம் கணவர் வீட்டிற்கு அனுப்பி சமாதானம் பேச முயன்றுள்ளார். ஆனால், சமாதானம் பேச வந்த செந்தில், சின்னான், அவரது தாயார், தங்கையை தாக்கியுள்ளார். இதயைடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்தது மட்டுமல்லாமல், தங்களை தாக்கிய செந்தில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சின்னான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சி

புகார் அளித்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சின்னான் தனது தாய், தங்கையுடன் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த காவலர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி மீட்டனர். பின்பு தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என காவலர்கள் உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் எஸ்.பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு  15.05.19                                                 சதாசிவம்
                                            
குடும்ப பிரச்சனையில் கட்டபஞ்சாயத்து செய்து அடித்து துன்புறுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சத்தியமங்கலத்தை சேர்ந்த 5பேர் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...                                  
                                 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த டி.ஜி புதூரை சேர்ந்தவர் சின்னான்.இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி மஞ்சுளாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் மஞ்சுளா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் சீலான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்..இது குறித்த தகவல் தெரிந்த மஞ்சுளா தனக்கு தெரிந்த செந்தில் என்பவர் மூலம் சீலானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்..கடந்த ஜனவரி மாதம் பேச்சுவார்த்தைக்கு சென்ற செந்தில் சீலான் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து சீலான் காவல்நிலையத்தில் புகார் அளித்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனை தொடரந்து இன்று ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த சீலான் அவரது தாயார் சாவித்திரி சகோதரி ஜீவா ஆகியோர் திடீரென தங்கள் மேல் மணணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்..இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்தனர்..மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது..எஸ்.பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..    
                  
15.05.19 erd suicide attempt
Visual send ftp
File name:TN_ERD_01_15_SUIDE_ATTEMPT_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.