தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் மத்திய அரசானது கல்வியில் காவியை புகுத்தும் வேலையை கைவிட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் இந்த தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மத்திய அரசு கல்வியில் காவியை புகுத்த முயற்சிக்கிறது என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருபோதும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: ஜாபுவா: ஆர்வம் இருந்தும் கல்வி கற்க வழியில்லாத மாணவர்கள்!