ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து, கோபி சாலை வழியாக அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபறும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து தாளவாடிக்கு தேங்காய் பாரம் ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது.
இதற்கிடையே சத்தியமங்கலத்தில் இருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரது மகன் சாமிநாதன் என்பவரும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தேங்காய் பாரம் ஏற்றி வந்த டெம்போவின் சக்கரம் வெடித்ததில், வண்டி நிலைதடுமாறி சாலையில் சாய்ந்தது, தொடர்ந்து, அவ்வழியே வந்த சாமிநாதனின் இருசக்கர வாகனம், டெம்போ மீது மோதியதில் தாய், மகன் இருவரும் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து, இருவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
முன்னதாக அரிசி பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர், இந்த இருசக்கர வாகன விபத்தைக் கண்டு லாரியை நிறுத்த முயன்று பிரேக் பிடித்ததில், நிலைதடுமாறி லாரி கவிழ்ந்தது. இதில், கார்த்திக், ரஞ்சித்குமார் என்ற இரு ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர். சத்தியமங்கலம், கோபி சாலையில் நடந்த இந்த விபத்துகள் காரணமாக, அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் வழியில் மோதல் - மக்கள் சாலை மறியல்