ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் உபயதுல்லா. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற மாணவி மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்ப மாட்டேன் என ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர்கள் மாணவியிடம் கேட்டபோது, தன்னுடைய தந்தை தன்னை மதுபோதையில் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர், மாணவியின் தந்தையைப் பிடித்து விசாரித்ததில் சிறுமிக்குப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க:சிறுமியைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் மீது பாய்ந்த போக்சோ