ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி குழுமத்திற்கு செந்தமாக இந்தியா முழுவதும் 650 பள்ளிகள் உள்ளன. இதன் நிறுவனர் பிறந்தநாளை ஒட்டி ஏழு மாநிலங்களில் ஒரே நேரத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாக யோகாசனம் மேற்கொள்ளப்பட்டது.
ஈரோட்டில் உள்ள தனியார் மஹாலில் இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒரே நேரத்தில் 45 வகையான யோகாசனங்களைச் செய்தனர். மாணவர்கள் அனைவரும் பதினைந்து நிமிடங்கள் இடைவிடாது யோகாசனம் செய்து அசத்தினர். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான விளையாட்டு அசைவுகளை வெளிப்படுத்தியும் கின்னஸ் சாதனை செய்தனர்.