ஈரோடு: 2017ஆம் ஆண்டு வரை ஈரோடு மாவட்டத்தில் மணல் தொழில் மிகவும் லாபகரமாக இருந்துவந்தது. 2017-க்குப் பிறகு மணல் விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. ஆனால் அந்த விற்பனை படுதோல்வி அடைந்தது. மணல் தட்டுப்பாடும் அதிகளவில் காணப்பட்டது.
பின்னர் ஒரு யூனிட் மணல் 3,500 ரூபாயிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மணல் குவாரிகள் மூடப்பட்டு தொழிலே முடங்கிப் போயுள்ளது.
தற்போது இந்தத் தொழில் முடங்கிப்போயுள்ள நிலையில் அதனை நம்பியே இருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது பதவி ஏற்றிருக்கும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியின்போது ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மணல் குவாரிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மணல் குவாரிகளைத் திறந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும், சிமென்ட் விலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொழிலாளர்கள் அரசிற்கு கோரிக்கைவிடுத்தனர்
இதையும் படிங்க:'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா... விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்