ETV Bharat / state

சீரான குடிநீர் விநியோகத்தை வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்!

ஈரோடு: அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சவண்டப்பூர் பவானி ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : May 20, 2019, 3:38 PM IST

erode

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் சவண்டப்பூர் பவானி ஆற்றுப்பாலத்தின் மீது காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு, புதுக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருவதாகவும், இப்பகுதிக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் நாள் ஒன்றுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், குடும்பத்திற்கு ஒருவர் வேலைக்கு செல்லாமல் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும், தினமும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரூராட்சி நிர்வாகம் உறுதியளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலர்களை அழைத்து பேசிய காவல் துறையினர் நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாலை நேரத்தில் குடிநீர் விநியோகம் இருக்கும் என்றும் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் - அந்தியூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சவண்டப்பூர் பவானி ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் 
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_02_20_SATHY_SALAI_MARIAL_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சவண்டப்பூர் பவானி ஆற்றுப்பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் சவண்டப்பூர் பவானி ஆற்றுப்பாலத்தின் மீது காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட ஆறாவது வார்டு மற்றும் புதுக்காடு உள்ளிட்ட பல பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருவதாகவும் இப்பகுதிக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் நாள் ஒன்றுக்கு 5 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் குடிநீருக்காக பல தொலைவு தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடிநீருக்காக தினமும் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவருவதாகவும் குடும்பத்திற்கு ஒருவர் வேலைக்கு செல்லாமல் குடிநீருக்காக அழையவேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும் அத்தாணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு பேரூராட்சி நிர்வாகம் உறுதியளிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். அதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலர்களை அழைத்துச்பேசிய காவல்துறையினர் நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாலை நேரத்தில் குடிநீர் விநியோகம் இருக்கும் என்றும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் - அந்தியூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.