ETV Bharat / state

சாலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு 15 பேர் படுகாயம்! - ஈரோடு விபத்து செய்திகள்

ஈரோடு: மினி சரக்கு வாகனம் சாலையோர சுவற்றில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

erode road accident
erode road accident
author img

By

Published : Oct 5, 2020, 1:00 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளைப்பாறைமேடு பகுதியை சேர்ந்த 11 பெண்கள், இரண்டு ஆண்கள், மூன்று சிறுவர்கள் நம்பியூர் பகுதியில் நிலக்கடலை பறிக்க கூலி வேலைக்கு வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனத்தில் சென்றனர்.

அப்போது சின்னக்கொரவம்பாளையம் ஓட்டைக்கிணறு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது வளைவில் திரும்பிய வாகனம் எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் தங்கராஜின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் வேகமாக மோதி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்தில் வெள்ளைப்பாறைமேடு பகுதியை சேர்ந்த ஜெயமணி என்ற விவசாயக்கூலி பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூன்று பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்து குறித்து சிறுவலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

இதையும் படிங்க:

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.