ETV Bharat / state

மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..! - erode netaji road drainage logging

ஈரோடு: சாலையில் மழைநீரோடு கலந்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்கடை நீர்
author img

By

Published : Nov 16, 2019, 2:00 AM IST

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்றுமாலை திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.

சுமார் இரண்டு மணிநேரம் பெய்த மழையால் சாலைகள் முழுவதும் மழைநீர் வெள்ளநீர் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மாநகரின் பிரதான சாலைகளான நேதாஜி சாலை, ஆர்.கே.வி சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மழைநீருடன், சாக்கடை கழிவுகளும் கலந்ததால் துர்நாற்றம் வீசியது.

சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீர்

இந்த கழிவுநீர் மாநகராட்சியின் உயிர் நாடியாக விளங்கும் நேதாஜி சாலையிலும், அதனை ஒட்டியுள்ள நேதாஜி தினசரி காய்கறி சந்தையிலும் புகுந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மூக்கைப்பொத்திக் கொண்டு சந்தையை கடக்க வேண்டிய நிலை உருவானது.

இதனால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நோய் பரவும் வகையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

இதையும் படியுங்க: மழை வேண்டி மரத்திற்கு திருமணம் செய்த கிராம மக்கள்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ15

ஈரோட்டில் கனமழை : சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் பாதிப்பு!

ஈரோட்டில் சுமார் இரண்டு மணி நேரமாக கொட்டி தீர்த்து மழையால் சாக்கடைகள் நிரம்பி சாலைகளில் வலிந்தோடியதால் பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள், பொது மக்கள் சாக்கடை நீரை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாயினர்.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டிவந்தது. இன்று மதியம் வரை வெயில் வெளுத்தநிலையில் இன்று மாலை சுமார் இரண்டு மழை நேரம் கனமழை கொட்டியது.

Body:விடாமல் பெய்த மழையால் சாலைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியதோடு ஈரோடு மாநகரின் பிரதான சாலையான நேதாஜி சாலை, ஆர்.கே.வி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த சாக்கடைகள் முழுவதிலும் ஏற்கனவே குப்பை கழிவுகளால் அடைத்து கிடக்கும் நிலையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாக்கடைகள் நிரம்பி மழை நீரும் சாக்கடை கழிவு நீரும் சாலைகளில் வழிந்தோடி துர்நாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் மாற்றுப் பாதை ஏதுமின்றி வேறு வழியில்லாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாக்கடை நீரால் சூழ்ந்துள்ள சாலைகளை கடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது .

இதில் ஈரோடு மாநகராட்சியில் உயிர் நாடியாக விளங்கும் நேதாஜி சாலையிலும் அதனை ஒட்டியுள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டிலும் சாக்கடை கழிவு புகுந்து துர்நாற்றம் ஏற்படுத்தியது.

Conclusion:மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு நோய் பரவும் வகையில் வழிந்தோடும் சாக்கடை அடைப்பையும் கழிவு நீரையும் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.