ஈரோடு: பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதி, முன்னாள் எம்பி சௌந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின்போது பிலாவல் பூட்டோவின் உருவப் படத்தை காலணி மற்றும் துடைப்பதால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதோடு அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர். அப்போது அங்கிருந்த போலீசார் உருவப்படத்தை கைப்பற்றி தீயை அணைத்தனர். அதன்பின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி பாகிஸ்தான் அமைச்சரின் உருவப்படத்தை எரித்ததாக பாஜக மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட 14 மீது மூன்று பிரிவுகளில் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐபிசி 143, 341, 285 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்கார் விருது பெற்ற பட நாயகி கைது