ஈரோடு அருகேயுள்ள நஞ்சை ஊத்துக்குளியில் பூர்ணா சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் கரி துகள்களால் அருகிலுள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், கரி துகள்களை சுவாசிப்பதால் பல்வேறு சுவாச நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்த்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: உருவமில்லாத கால்களை மட்டும் கொண்ட சிலை கண்டெடுப்பு