ஈரோடு ஆர்கேவி சாலையில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதற்கான சங்கத்தில் 800க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடம் வாங்குவது தொடர்பாக 50 ஆயிரம் ரூபாய் வரை சங்கத்தின் நிர்வாகிகள் வசூல் செய்துள்ளனர். ஆனால் இதுவரை உறுப்பினர்களுக்கு இடம் வாங்கித் தராத நிலையில் சங்கத்தின் நிர்வாகிகளை கண்டித்து மார்க்கெட் பின்புறம் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சங்கத்தின் சந்தா குத்தகை போன்ற கணக்குகளை முறையாக சங்க நிர்வாகிகள் தெரிவிப்பது இல்லை என்றும் சங்கத்திற்காக வாங்கப்பட்ட 21 ஏக்கர் நிலத்தை சங்கத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் மீது கிரையம் செய்து உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் முறையாக சங்கத்தை நிர்வாகம் செய்யாத நிர்வாகிகளை நீக்கம் செய்து, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த புகார் தொடர்பாக சங்க நிர்வாகிகளை கேட்டபோது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பிதழ் விடுக்கப்பட்டு வருவதாகவும் கணக்குகளை சரியாக பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.